-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

விசுவாசத்தைப் பூரணப்படுத்தும் 5 முக்கிய வழிகள்

 

விசுவாசம் ஏன் பூரணப்படவேண்டும் ?

விசுவாசம் பூரணப்படும்பொழுது விசுவாசத்தினால் தேவனுக்குப் பிரியமான சாட்சியைப் பெற்று வாழ்ந்தால் இயேசு வரும்பொழுது "என் பிரியமே நீ எழுந்து வா" என்று கூறுவார்.

சாத்தான் அந்த விசுவாசத்தைக் குலைக்கக் கிரியைச் செய்கிறான். வேதவசனம் 1பேதுரு 1:7 -ல் இப்படிச் சொல்கிறது. " அழிந்து போகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படுமாம், அதைப் பார்க்கிலும் விலையேறப்பெற்றது விசுவாசம். விசுவாசம் நமக்குள்ளே சோதிக்கப்படும்போது நமது வாழ்க்கையிலே விசுவாசத்தை இயேசு காணவேண்டும். ஏனெனில் இயேசு கூறினார் மனுஷக்குமாரன் வரும்பொழுது விசுவாசத்தைக் காண்பாரோ! என்று.

இயேசுகிறிஸ்து எந்த நாளில் வருவார் எனத் தெரியாது. ஒருவிசை வந்தார் பாவிகளை இரட்சிக்க. இரண்டாவது விசை வரப்போகிறார் ரிசுத்தவான்களை அழைத்துச் செல்ல. அந்த ரிசுத்தவான்களை அழைத்துப் போகப் போகிற இயேசுகிறிஸ்து ரிசுத்த சபையாகிய தன்னுடைய ரீரத்தை "என் பிரியமே" என்று அழைக்க வேண்டும் என்றால் விசுவாசத்தில் நீங்கள் பூரணம் அடைய வேண்டும்.

இயேசு சொன்னார்: இராஜ்யத்தின் புத்திரர் புறம்பான இருளிலே இருப்பார்கள். வேசிகளும், விபச்சாரிகளும் உங்களுக்கு முன்பாக இராஜ்யத்திலே இருப்பார்கள். அப்படியென்றால் இரட்சிக்கப்பட்டேன் என்று சொல்லி வாழ்ந்துக் கொண்டிருக்கிறவர்கள் அநேகர் நரகம் என்னும் அக்கினிக் கடலுக்குப் போக ஏதுவாயிருக்கிறார்கள். ஐயோ நான் விபச்சாரத்திலும், வேசித்தனத்திலும் அதிகரித்துப் போனேனே என்று ஒரு சூழ்நிலையில் வாழ்ந்த பலர் அந்த நாளிலே இயேசு வருவதற்கு முன்பாக இரட்சிக்கப்பட்டு உத்தமமாய் வாழ்ந்த காரணத்தினால் பறந்து போவார்களாம். விசுவாசம் சோதிக்கப்படும்பொழுது விசுவாசம் நம்மை விட்டு விலகுகிற ஒரு நிலைமை வரக்கூடாது.

யோபு ஒரு தேவனுடைய மனுஷன். அவன் விசுவாசத்தில் நிற்கிறானா? இல்லையா? என சோதிக்கப்படக் கர்த்தர் சாத்தானுக்கு அனுமதிக் கொடுத்தார். ஒரே நாளில் 10 பிள்ளைகளும் செத்துப் போய்விட்டார்கள். ஒரே நாளில் அவன் ஆஸ்தி முற்றிலும் அழிந்து போய்விட்டது. அதன்பின் யோபுவினுடைய ரீரமும் பாதிக்கப்பட்டது. அந்த நிலைமைக்கு ஆளான அவன் சொல்கிறான் "கர்த்தர் என்னைக் கொன்றுபோட்டாலும் நான் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று. ஆகவே சோதனையில் விசுவாசத்தைக் காத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அப்போஸ்தலர்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர்களிடத்தில் விசுவாசம் உண்டு. ஆனாலும் அவர்கள் எங்கள் விசுவாசம் இன்னும் வர்த்திக்கப்பண்ணப்படவேண்டும் என்கிறார்கள்.

கடுகுவிதையளவு விசுவாசம்  உங்களுக்கு இருந்தால்  நீங்கள் இந்த மலையைப் பார்த்து,  இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்;  (மத்தேயு 17:20)

இயேசு கூறினார் "தன் விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப் போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது" என்று.

நாம் நம் விசுவாசத்தை விட்டுப் பின் வாங்கிப் போகும்போது ஆண்டவரின் ஆத்துமா நம்மேல் பிரியமாயிருக்காது. விசுவாசத்தில் வல்லவர்களாய், விசுவாசத்தில் பூரணப்பட்டவர்களாய் மாறும்போழுது மாத்திரமே அவர் என் பிரியமே என்று கூறுவார். ஆகவே நம் விசுவாசம் நாளுக்கு நாள் விருத்தியடைய வேண்டும்.

எப்படி விசுவாசம் நாளுக்கு நாள் விருத்தியடையும் என்று இங்கு ஐந்து காரியத்தை நாம் பார்ப்போம்.

1. தேவனால் எல்லாம் கூடும்  என விசுவாசித்தல்:

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதக்காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும், எதையும் செய்ய வல்லவர் என்றும் விசுவாசிக்க வேண்டும். அவரைக் குறித்ததான விசுவாசம் நமக்குள்ளே வளர வேண்டும்.(எபி 1:6)

நான் ஒரு உதாரணம் சொல்கிறேன், நமது உடலில் ஒரு கட்டி இருந்திருக்கும் அந்தக் கட்டியை மருத்துவர் ரிசோதனை செய்து cancer கட்டி என்று சொல்லி இருப்பார். ஆண்டவரே cancer கட்டி என்று சொல்கிறார்கள் சுகமாக்கும் என்று கண்ணீரோடு ஜெபம் பண்ணியிருப்போம் கர்த்தர் சுகமாக்கியிருப்பார் மறுபடியும் மருத்துவர் ரிசோதனை செய்யும் பொழுது cancer கட்டி இல்லையே என்று சொல்வார். உடனே நம் புத்தி என்ன சொல்லும்? மருத்துவர் ஒழுங்காக பரிசோதனைப் (diagnose) பண்ணவில்லை அதனால் cancer கட்டி என்று சொல்லிவிட்டார் என்போம்.

"நம் தேவனாகிய கர்த்தர்

சுகமாக்க வல்லவர் என்றும்,

எதையும் செய்ய வல்லவர் என்றும்

விசுவாசிக்க வேண்டும்."

என் தேவனால் எல்லாம் கூடும் என்று விசுவாசிக்க வேண்டும். ரீரத்தில் சோதனை, வாழ்க்கையில் பிரச்சனை வந்ததன் காரணம், நம் விசுவாசத்தை நம்மை விட்டு விலகப் பண்ணுவதற்கே. என் ரீரத்தின் பிரச்சனையை விட என் தேவன் பெரியவர் என்று சொல்ல வேண்டும். இதோ நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் என்னால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ ? என்று நம் தேவன் சொல்லியிருந்தும் அநேக நேரங்களில் தேவன் பெரியவர் என்று விசுவாசிப்பதை விட பிரச்சனைகளை பெரிதாக எண்ணிவிடுகிறீர்கள். எத்தனை பெரிய பிரச்சனையாயிருந்தாலும் எல்லாவற்றைப் பார்க்கிலும் தேவன் சர்வவல்லமையுள்ளவர்

எப்படியென்றால் காற்றும் வராது, மழையும் வராது, ஆனாலும் தண்ணீர் பள்ளத்தாக்கை நிரப்பும். மனுஷரால் இது கூடாதுதான் ஆனால் தேவனாலே எல்லாம் கூடும் என் கர்த்தர் அப்படிப்பட்டவர் என்று விசுவாசிக்க வேண்டும். நம் ஆண்டவர் இந்த உலகத்தைப் படைக்கும் போது சூரினைப் படைக்கும் முன், சந்திரனைப் படைக்கும் முன், நட்சத்திரங்களைப் படைக்கும் முன்னரே வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார். இவைகள் எதுவும் இல்லாமலே முதலில் வெளிச்சம் வந்தது. ஆகவே அவர் சர்வ வல்லமையுள்ளவர். அவரால் எதையும் செய்ய கூடும் என்றும் விசுவாசிக்க வேண்டும்.

                ஆனால் இன்றைய விசுவாசிகளோ சின்ன சின்ன பெலவீனங்களில்  தேவனை நம்புகிறார்கள். ஆனால் மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்று வரும்போது தேவனை விட சூழ்நிலையை பெரிதாக நினைத்துவிடுகிறார்கள். ஆனால் நாமோ அப்படியிராமல் எல்லாவற்றைப் பார்க்கிலும் என் தேவன் சர்வ வல்லமையுள்ளவர் என விசுவாசிப்போம்.

2. வாக்குத்தத்தங்களை விசுவாசித்தல்

எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கிறதே.(2 கொரி 1:20)

மேற்கண்ட வசனத்தின்படி எப்படி இயேசு இருக்கிறார் என்று விசுவாசிக்கிறோமோ அப்படியே அவருடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் அவருக்குள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கிறது என்று விசுவாசிக்க வேண்டும். அநேகர் வேதாகமத்தை வெறும் அச்சடிக்கப்பட்ட புஸ்தகமாகவே நினைக்கின்றனர். ஆனால் அவருடைய வார்த்தைக்குள் வேதத்தின் வாக்குத்தத்தங்களுக்குள் உயிர் இருக்கிறது என்பதினை மறந்து விடுகின்றனர். நம் தேவன் வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர். பிறந்த குழந்தையின் தொட்டிலுக்கு கீழே செருப்பு விளக்கமாறு போன்றவற்றை இந்துக்கள் போடுவார்கள். ஏனென்றால் காத்து கருப்பு அண்டிவிடக் கூடாது என்று.

இதைப் போலவே கிறிஸ்தவர்கள் தலைமாட்டில் பைபிளை வைத்துக் கொண்டால் எதுவும் அண்டாது என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வேதம் தலைமாட்டில் வைப்பதற்காக அல்ல. அதிலுள்ள வாக்குத்தத்தங்கள் ஜீவனுள்ளவைகள் அவைகள் கண்டிப்பாய் நிறைவேறும் என வசனங்களை கொஞ்சமும் சந்தேகமில்லாமல் நம்ப வேண்டும்.

ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். ஆபிரகாமிடம் தேவன் தன் பிள்ளையை பலியிடச் சொல்கிறார். அவன் பலியிடச் செல்லும்போது அவன் சொன்ன வார்த்தை "நானும் என் பிள்ளையாண்டானும் அவ்விடம் போய்த் தொழுது கொண்டு திரும்பி வருவோம்" என்று. ஏன் அவ்வாறு சொன்னான் என்றால், ஆதி 17:16 -ல் பார்க்கும்பொழுது நான் அவளை( சாராளை) ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன். அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் இராஜாக்கள் உண்டாகவும் அவளை ஆசீர்வதிப்பேன் என்றார். இந்த வாக்குத்தத்தத்தை மனதில் வைத்துக் கொண்டு, ஆண்டவர் சொன்னது சொன்னது தான். என் பிள்ளையை பலியிடச் சொல்கிறார். அவர் உயிரோடு எழுப்ப வல்லவர் என்று விசுவாசித்தான்

உங்கள் சோதனைகள், பிரச்சனைகள் மத்தியிலே உங்களைச் சோதித்து விசுவாசத்திலிருந்து உங்களை விலகபண்ண சாத்தான் முயற்சி செய்யும்பொழுது வாக்குத்தத்தத்தை உறுதியாய் பிடித்துக் கொள்ளுங்கள். அது யாருக்கோ எழுதிய வாக்குத்தத்தம் எனக்குப் பலிக்காது என சந்தேகப் படாமல் வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டு அவர் வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர். பொய் சொல்ல அவர் மனிதர் அல்ல, மனம்மாற மனுபுத்திரனும் அல்ல வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லவர் என்று விசுவாசிக்க வேண்டும். எனவே எந்தப் பிரச்சனையானாலும் முதலில் அதனை மாற்ற தேவனால் முடியும் என்று விசுவாசியுஙகள். பின்னர் அந்தப் பிரச்சனையை மாற்றும்படி வேதத்தில் உள்ள வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டு ஜெபியுங்கள்.

ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன் என்னுடைய மகனின் சிறிய வயதில் அவனுடைய இரண்டு கால்களும் அழுகிப் போகிற மாதிரி புண் உண்டானது. ஆண்டவரின் பெரி தயவினால் இரண்டு கால்களும் சுகமானது. பின்பு திடீரென ஒரு நாள் காய்ச்சல் வந்தது. வயது 8. நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அடுத்த நாள் அவன், அப்பா, காலை கீழே வைக்க முடியவில்லை என்று சொல்லி அழுதான். உடனே என் சிந்தனையில் போலியோ ஊசி போடாததினால்தான், காய்ச்சல் வந்ததும் கால் இப்படி ஆகிவிட்டது என்று. ஆண்டவரிடம் போராடி ஜெபம் பண்ணினேன்.

சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.( சங் 22:21) என்ற வாக்குத்தத்தத்தைத் தேவன் தந்தார். சிங்கத்தின் வாயிலிருந்து அதாவது அழுகிப்போன கால்களை சுகமாக்கினவர் நடக்க முடியாத கால்களையும் நடக்க வைக்க வல்லவர் என்று விசுவாசித்து 4 நாட்கள் ஜெபம் பண்ணினேன். ஆண்டவருடைய கிருபையினாலே 5 வது நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நடந்து பின் நன்றாக நடந்து கொண்டிருந்தான். விசுவாசம் இல்லாமல் கேட்டால் அந்த வசனம் அவர்களிலே கிரியை செய்யாது. வசனத்தின் அடிப்படையில் வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொண்டு கேளுங்கள். கர்த்தர் செய்வார்.

3. தைரியம்:

இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே ¨தைரியத்தையும்,....(11 பேதுரு 1:5)

விசுவாசத்தோடே ¨தைரியத்தைக் கூட்ட வேண்டும், விசுவாசம் பலன் செய்ய வேண்டுமென்றால் ¨தைரியம் அவசியம் என்று வேதம் சொல்கிறது. நீங்கள் தைரியமடையும்படியாக வேதத்திலிருந்து  சில உதாரணங்களைச் சொல்கிறேன்.

1. இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலில் நடந்த போது வெட்டாந்தரையில் நடந்தது போல நடந்தார்கள். ஆனால் எகிப்தியர்கள் நடந்த போது செங்கடல் அவர்களை மூழ்கடித்தது.

2. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ இவர்களை ஏழு மடங்கு அக்கினி ஜுவாலையிலே போட்ட பொழுது வேகவில்லை. ஆனால் அவர்களைத் தூக்கிப்போட்டவர்களை அக்கினி கொன்றுபோட்டது.

3. இஸ்ரவேலருக்கு விரோதமாகக் கோலியாத் யுத்தத்திற்கு வந்தபோது கோலியாத்திற்குப் பயந்து சவுல் அமைதியாய் நிற்கிறான். தாவீது தேவன் என் கூட இருக்கிறார் என்ற ¨தைரியத்துடன் சென்று கோலியாத்தை முறியடித்தான்.

நான் உன்னை விட்டு விலகுவதில்லை பயப்படாதே என்று ஆண்டவர் சொல்லியிருந்தும்  அநேகருக்கு இன்று தைரியம் இல்லை. அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்று சீஷர்களிடம் சொன்ன இயேசு,  படகிலே அவரோடு கூடவே சென்ற போதிலும்  சீஷர்கள் காற்றைப் பார்த்து பயந்து விட்டனர், அவரைத் தூங்க வைத்துவிட்டு பின்னர் ஐயரே உமக்கு கலையில்லையா? என்று கேட்டனர்.அநேக விசுவாசிகளின் வாழ்க்கையும் இன்றைக்கு இப்படித்தான் இருக்கிறது. நாம் இப்படி இல்லாமல் எந்த சூழ்நிலையாய் இருந்தாலும்   நம்மை விட்டு பயம் போக வேண்டும். ¨தைரியம் வர வேண்டும். ஆகவே என்னோடு கூட ஆண்டவர் இருக்கிறார், எனவே நான் விசுவாசத்தோடுக் கூட ¨தைரியத்தையும் கூட்டுகிறேன் என்று ¨தைரியமாய் இருங்கள்.           

4. அறிக்கைப்பண்ணுதல்:

நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைப் பண்ணப்படும் (ரோமர் 10:10)

இந்த வசனத்தின்படி இருதயத்தில் விசுவாசித்து வாயினாலே அறிக்கைப் பண்ணினால் இரட்சிப்பு உண்டாகும். அதாவது விடுதலை உண்டாகும்.

ஒரு நாள் motor bike-ல் செல்லும் போது, கீழே விழுந்து காலில் அடிப்பட்டது. 4 நாட்கள் ஆன பிறகு காலில் சீழ் வர ஆரம்பித்துவிட்டது. ஒரு மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே ஒரு விசுவாச சகோதரி இருப்பார். அவரின் மூலமாக ஒரு மருத்துவருக்கு சுவிசேஷம் சொல்லப் போவேன். அந்த மருத்துவர் சொன்னார் pastor சர்க்கரை வியாதி இருக்கப் போகிறது, முதலில் சர்க்கரை உள்ளதா? என்று ரிசோதனை செய்யுங்கள் என்றார். நான் எனக்கு இருக்காது என்றேன். பரவாயில்லை, பார்த்துவிட்டால் நல்லது என்றார் அந்த மருத்துவர். சர்க்கரை ரிசோதனை செய்தார்கள். சர்க்கரை 266 உள்ளது என்றார்கள். நான் உங்கள் machine தப்பாய் காண்பிக்கிறது என்றேன். எப்படி தப்பாய் காண்பிக்கும் என்றார் அம்மருத்துவர். பின் அவர் சாப்பிடாமல் ஒரு test-ம் சாப்பிட்டு விட்டு ஒரு test-ம் எடுங்கள் என்றார். நானும் அவ்வாறே செய்தேன். Result Nil என்று வந்தது. அந்த மருத்துவர் எப்படி Nil என்று வந்தது என்றார். எங்களுடன் ஆண்டவர் உள்ளார், ஒன்றும் இருக்காது, என் கர்த்தரால் எல்லாம் கூடும் என்றேன்.          



வாழ்க்கையில் பிரச்சனையா? ரீரத்தில் வியாதியா? ஆண்டவரை விசுவாசித்து வாயினால் அறிக்கைப் பண்ணுங்கள் கர்த்தர் ஜெயத்தைக் கொடுப்பார்.

5. கிரியை செய்தல்:

விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே".(யாக் 2:22)

            ஆபிரகாம் தேவனால் எல்லாம் கூடும் என்று விசுவாசித்தது மாத்திரம் அல்ல அவருடைய வாக்குத்தத்தங்களை முழு நிச்சயமாய் நம்பினான். அவருடைய வார்த்தையை வாக்குத்தத்தை தான் நம்பினதை கிரியையிலும் காண்பித்தான்.  நம்முடைய வாழ்க்கையிலும்  நம்முடைய நம்பிக்கையை கிரியையில் காண்பிக்க வேண்டும். கர்த்தருடைய வசனம் நம்மை உணர்த்தும் போது அந்த வசனத்தின்மேல் கையை வைத்து, இப்படி வாழ்வதற்கு என்னை ஒப்புக் கொடுக்கிறேன் என்று சொல்ல வேண்டும். இந்த வார்த்தையின்படி கிரியை செய்ய,கிரியை செய்ய நம் விசுவாசம் பூரணப்படும்.



அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.(யாக் 2:17). விசுவாசிகளிடத்தில் இருக்கும் விசுவாசம் அவர்கள் கிரியை செய்யாததினால் செத்துப் போய்விடும். விசுவாசம் சாகிற மாதிரி வாழக்கூடாது. என்ன சொன்னாலும் செய்கிறேன் என்று கர்த்தருடைய வசனத்திற்கு நடுங்குகிறதற்கு ஒப்புக் கொடுத்தால் நிச்சயமாய் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணி இயேசு வரும்பொழுது என் பிரியமே எழுந்து வா என்று சொல்வார்.

எனவே விசுவாசம்  பூரணமாக்கப்பட வேண்டுமானால்

1. தேவனால் எல்லாம் கூடும்  என விசுவாசிக்க வேண்டும்

2. வாக்குத்தத்தங்களைப்  பற்றிக் கொள்ள வேண்டும்

3. விசுவாசத்தோடே தைரியத்தைக் கூட்ட வேண்டும்

4. அறிக்கைப்பண்ண வேண்டும்

5. வசனத்தின்படி கிரியை செய்ய வேண்டும்

கர்த்தரின் வேலைக்காரன்.

P. அற்புதராஜ் சாமுவேல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்